திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் விழா: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு...

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும் நிலையில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் விழா: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு...

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.  தினந்தோறும் முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி நேற்று வரை நாளொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தீபாவளி விடுமுறை தினங்களையொட்டி கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

விழாவின் 5ஆம் நாளான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை யாகசாலை மண்டபத்தில்  யாகசாலை பூஜை நடைபெற்றது.  பின்னர் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  

இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் மாலை 4 மணிக்கு கடற்கரை நுழைவுவாயிலில் நடைபெறுகிறது.  கடந்த ஆண்டை போல இந்தாண்டும் பக்தர்களின்றி கோவில் கடற்கரை நுழைவாயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. சூரசம்ஹாரத்தையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.