TANUVAS -ன் இளநிலைப் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

TANUVAS -ன் இளநிலைப் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் (பிவிஎஸ்சி&ஏஎச் மற்றும் பிடெக்) பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்விற்கான தேதி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2023-24ஆம் ஆண்டிற்கான இளநிலை (பிவிஎஸ்சி&ஏஎச் மற்றும் பிடெக்) படிப்பிற்கான கலந்தாய்வின் விவரத்தை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில், 16.08.2023 அன்று - சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ”விளையாட்டு வீரர்கள் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு மாற்றுத்திறனாளிகள்” ஆகியோர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். 

இதையும் படிக்க : ”ஒரு தாய் இங்கே இருக்கும் நிலையில், மற்றொரு தாயை மணிப்பூரில்...” பாஜகாவை விளாசிய ராகுல்காந்தி!

17.08.2023 அன்று - 7 . 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில் அவர்களுக்கான முதல் சுற்று மட்டும்  நேரடி கலந்தாய்வாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 18.08.2023 அன்று - பொதுப்பிரிவுக்கான பிவிஎஸ்சி&ஏஎச் (இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் கலையியல் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு பட்டப்படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறும். 

பொதுப்பிரிவுக்கான பிவிஎஸ்சி&ஏஎச் (இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் கலையியல் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு பட்டப்படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு (First Round Counselling) இணையதளம் (By online mode) வாயிலாக நடைபெறும். அதற்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.adm,tanuvas.ac.in மற்றும் www.tanuvas.ac.in) காணலாம். குறிப்பாக, கலந்தாய்வு கூட்டத்திற்கு வரும் மாணவர்கள் ஒரு மணிநேரம் முன்னதாகவே கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.