டி.என்.பி.எஸ்.சி- யை துண்டாடக் கூடாது: புதிய ஆள்தேர்வு வாரியம் தேவையில்லை...! - ராமதாஸ் அறிக்கை.

டி.என்.பி.எஸ்.சி- யை துண்டாடக் கூடாது: புதிய ஆள்தேர்வு வாரியம் தேவையில்லை...!  - ராமதாஸ் அறிக்கை.

தமிழ்நாட்டில் அரசு துறை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் தேர்வாணையத்தை  இரண்டாக பிரிக்கவும், புதிய தேர்வு வாரியத்தை  அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அப்படி புதிய தேர்வு ஆணையம் அமைக்கத்  தேவையில்லை எனவும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

அதில் அவர் குறிப்பிட்டதாவது,   "தமிழ்நாட்டில் அரசுத்துறை பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள் . அதன்படி, ஆசிரியர்கள், மருத்துவர்கள், சீருடைப்பணியாளர்கள் போன்றவர்களை தேர்வு செய்ய துறை சார்ந்த தேர்வு வாரியங்கள் செயல்பட்டு வரும்போதிலும், பெரும்பாலான அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாகவே தகுதியானவர்கள்  தேர்வாகின்றனர்.. இவ்வாறிருக்க, இந்த அமைப்பானது சுமூகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சார்பு நிலை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய  எஸ்.எஸ்.சி. போன்ற இன்னொரு தேர்வு வாரியத்தை அமைக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அது குறித்து முடிவு எடுப்பதற்காக , அரசும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய உயரதிகாரிகளின்  கலந்தாய்வுக் கூட்டம் வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

 தற்போது தேர்வாணையத்தை இரண்டாக பிரிக்கவோ, அல்லது புது  தேர்வாணையத்தை  உருவாக்கவோ எந்த தேவையும் எழவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2023 -ஆம் ஆண்டிற்கான ஆள்தேர்வு அட்டவணையின்படி நடப்பாண்டில் 29 வகையியான பணிகளுக்கான ஆள்தேர்வு  அறிக்கை வெளியிடப்படவுள்ளது.  இதில், பணியிடங்களின்  எண்ணிக்கை அறிவிக்கப்படாத  குரூப்- 4  பணிகள் தவிர மீதமுள்ள 28 வகையான பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக தீவு செய்யப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 3,582 மட்டுமே. மொத்தமுள்ள 29  வகையான பணிகளில் 22 வகையான பணிகள் சார்புநிலைப் பணிகள்தான். அவை த்விர்த்து மீதமுள்ள 7 வகையான பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிகாரிகளின் மொத எண்ணிக்கை 500-க்கும் குறைவு தான். 

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பிரிப்பதற்காக தமிழக அரசு வகுத்துள்ள திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு முழுவதும் 500-க்கும் குறைவானோரை மட்டுமே தெர்ந்தெடுக்கும். மீதமுள்ள  3000 பணிகள், குரூப் -4 பணிகளுக்கு 4000 பேர் தேர்வு செய்வதாக இருந்தால் அவற்றையும் சேர்த்து மொத்தம் 700 பணிகளுக்கு புதிதாக அமைக்கப்படவுளல்ல தேரசு வாரியம் தான் ஆட்களை தேர்வு செய்யும். தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி உருவாக்கப்பட்டது. அதற்கு பொறுப்புடைமை அதிகம். அத்தகைய அமைப்பு வெறும் 5000 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது, என்பது, அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட அமைப்பினை சிறுமைப்படுத்தும்  செயல் ஆகும். 

தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையத்தின் மீது பா.ம.க -வுக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு, ஆனாலும் ஒப்பீட்டளவில் அதன் செயல்பாடுகள் சிறப்பானவை. ஆனால், புதிதாக ஏற்படுத்தப்படும் தேர்வு வாரியத்தில் எந்தவித பொறுப்புடைமையும் இருக்காது. மேலும் முறைகேடுகளைக் நடப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம்.

தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம் ஆண்டுக்கு 1 இலட்சம் பேரை தேர்வு செய்வதாக இருந்து, அதற்கு பணிச்சுமை  அதிகமாக இருந்தால் , இன்னொரு அமைப்பை  உருவாக்குவது குறித்து ஆராயலாம். ஆனால், அரசு பணியாளர்  தேர்வாணையம் அண்மை காலங்களில் ஆண்டுக்கு சராசரியாக 6000 முதல் 7000 பேரை மட்டுமே தேர்வு செய்கிறது. இது தேர்வாணையத்துக்கு எந்தவித பணிச்சுமையையும் ஏற்படுத்தாது.  ஆவின், மின்சார வாரியம், அரச போக்குவரத்துக்கு கழகங்கள்  உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் , அரசு பணியாளர்  தேர்வாணையமே தெர்ந்தெடுக்க வகை செய்யும்சட்டம், கடந்த 2021- ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இயற்றப்பட்டது. அப்போது கூட அரச பணியாளர் தேர்வாணையத்திற்கு அப்பணிச்சுமை எதுவும் இருப்பதாகத் தெரிவிக்கப்படவில்லை. 

அவ்வாறு இருக்கும் போது இப்போது புதிய   வாரியம் அமிழ்க்க வேண்டிய தேவை என்ன..?  தமிழ்நாடு அரச பணிக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஆணையம் அனைத்து வகையான ஐயங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்."  

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

இதையும் படிக்க     }  "மருந்து தட்டுப்பாடுகளை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..." - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.