ஸ்டார்மிங் ஆபரேஷன் செயல்பாடு- 52 மணி நேரத்தில் 21,592 பழைய குற்றவாளிகள் கண்டுபிடிப்பு: தமிழ்நாடு காவல்துறை அதிரடி

தமிழகம் முழுவதும் கடந்த 52 மணி நேரத்தில் பழைய குற்றவாளிகள் 21 ஆயிரத்து 592 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

ஸ்டார்மிங் ஆபரேஷன் செயல்பாடு- 52 மணி நேரத்தில் 21,592 பழைய குற்றவாளிகள் கண்டுபிடிப்பு: தமிழ்நாடு காவல்துறை அதிரடி

கடந்த 23 -ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில், ஸ்டார்மிங் ஆபரேஷன் என்னும் முற்றுகை செயல்பாட்டை மேற்கொள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் கடந்த 52 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 21 ஆயிரத்து 592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியணையின்படி, 294 பேர் கைதாகி உள்ளனர். அதே போல், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள 972 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டு, 2 ஆயிரத்து 526 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 7 நாட்டு துப்பாக்கிகள், ஆயிரத்து 110 கத்திகள் உள்ளிட்ட  பிற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.