மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் ...

இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.

மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் ...

இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் யார் என்பது தொடர்பாக இந்தியா டுடே ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 42 சதவீத ஆதரவை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இவரை தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38 சதவீதத்தை பெற்று 2-வது இடத்திலும், கேரளா முதல்வர் பினரா யி விஜயன் அவர்கள் 35 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்திலும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே 31 சதவீதத்தை பெற்று நான்காம் இடத்திலும் உள்ளனர். 

மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 30 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளார். அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 6வது இடத்திலும், உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 7வது இடத்திலும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலாட் 8வது இடத்திலும் உள்ளனர். இதனை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 9வது இடத்திலும், ஜார்காண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் 10வது இடத்திலும், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹெல் 11வது இடத்தில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.