ஓட்டம் பிடித்த ஆர்.எஸ்.எஸ் பேரணி...திமுக துணை பொதுச்செயலாளரின் பதிலடி என்ன?

ஓட்டம் பிடித்த ஆர்.எஸ்.எஸ் பேரணி...திமுக துணை பொதுச்செயலாளரின் பதிலடி என்ன?

தமிழ்நாடு என்பதால்தான், ஆர்எஸ்எஸ்-ன் பேரணி பின்வாங்கப்பட்டுள்ளதாகவும்,  ஆர்எஸ்எஸ் பின்வாங்கியது மகிழ்ச்சியளிப்பதாகவும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன்:

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்துவதற்கு அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றமும் அதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக கட்சி தலைவர் திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தும் அதே நாளில் மனித நல்லிணக்க பேரணியை நாங்கள் நடத்துவோம் என்று அறிவித்தனர். இதையடுத்து, இரண்டு பேரணிகளும் ஒரே நாளில் நடைபெற்றால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் தமிழக காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி தரவில்லை. 

பேரணியை ஒத்தி வைத்த ஆர்.எஸ்.எஸ்:

அதன்பின், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று தமிழகத்தில் 44 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நீதிமன்றத்தின் நிபந்தனைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதால் இன்று நடைபெறவிருந்த பேரணியை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. 

இதையும் படிக்க: மனுஸ்மிருதிக்கு எதிராக களமிறங்கிய திருமா...அனல்பறக்கும் அரசியல் களம்..!

அன்பின் பாதை அறகட்டளையின் விழா:

இந்நிலையில்,  சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் அன்பின் பாதை அறகட்டளையின் சார்பில் நடைபெற்ற பரிசு வழங்கும்   விழாவில் திமுக துணை பொது செயலாளார் கனிமொழி கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.

கனிமொழி பேச்சு:

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்காக தமிழ்நாடு அரசு அனுமதி அளித்த போதிலும், பேரணி நடத்துவதில் இருந்து ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பின்வாங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஏனென்றால் இது தமிழ்நாடு என்பதால் தான் பின்வாங்கியதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.