"மொழிக்காக முதலில் குரல் கொடுப்பவர்கள் தமிழர்கள்" - தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெருமிதம்

மொழிக்காக முதலில் குரல் கொடுப்பவர்கள் தமிழர்கள்தான் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

"மொழிக்காக முதலில் குரல் கொடுப்பவர்கள் தமிழர்கள்" - தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெருமிதம்

சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர்,

ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும் போது நீதிபதிகள் கண்மூடி சட்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது என்றும் சமூக உண்மையை  உணர வேண்டும் என்று குறிப்பிட்டார், மொழி, அடையாளம் ஆகியவற்றால் பெருமை மிக்க தமிழர்கள்,

மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருவார்கள் என பெருமைபட கூறிய தலைமை நீதிபதி ரமணா, விசாரணை என்பது வழக்காடிகள் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும் என்றும் திருமண  மந்திரங்களை போல புரிந்து கொள்ள முடியததாக இருக்க கூடாது என்றும் கூறினார்,.

நீதிமன்ற விசாரணைகளில் மாநில மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ள போதும், தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை  பயன்படுத்தி, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.