கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்!

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்கள் முன்பாகவும், ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பை வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.

பின்னர் போராட்டத்தை முடித்துக்கொண்ட ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தவாறே விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.