சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை முதல் கோவில்கள் திறப்பு...

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை காலை 6 மணி முதல் அனைத்து  வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட உள்ளது. 

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்  நாளை முதல் கோவில்கள் திறப்பு...

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமிதரிசனம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து நாளை காலை கோவில்களை திறந்து பூஜை செய்வதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் கோவில்கள் நாளை திறக்கப்பட இருக்கிறது.இதனைதொடர்ந்து அனைத்து கோவில்களையும் தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்றும் இன்றும் நடைபெற்றது.  

சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் இந்த பணிகள் நடைபெற்றன.இதேபொல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களை சுத்தப்படுத்தும் பணி  மும்முரமாக  நடந்தது.திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பணி புரியும் ஊழியர்கள் பட்டாச்சாரியார்கள் என அனைவருக்கும் கொரோனா  பரிசோதனைகள் செய்யப்பட்டதுடன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.