தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலம் சேதம் - வாகன ஓட்டிகள் அச்சம்.

தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலம் சேதம் - வாகன ஓட்டிகள் அச்சம்.

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலம், பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து கோலியனூர் செல்லும் சாலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக ஏராளமான பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில் மேம்பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு கான்கிரீட் பில்லர்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது .

மேலும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் உளிர்ந்து கொட்டி வருகிறது. இதனால் மேம்பாலம் உறுதித் தன்மை இழந்து எப்பொழுது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளது.

நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க    | "மின்வேலி அமைக்க முன் கூட்டியே பதிவு செய்வது கட்டாயம்" வனத்துறை அறிவுறுத்தல்!