உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்...அமைச்சர் அன்பில் மகேஷ்...!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் என்று தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்...அமைச்சர் அன்பில் மகேஷ்...!!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று தொடந்து பலர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சமீபகாலமாக தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சிலரும் இந்த கோரிக்கையை வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்த பேச்சுகளை உண்மையாக்கும் வகையில் மூத்த அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை விட உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் என்று தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.’

மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அமைச்சர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார்' என்று கூறினார்.