மே தின நினைவுச் சின்னம்...! முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி...!!

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கருப்பு சிவப்பு உடை அணிந்து வந்து மே தின நினைவு சின்னத்தில் தொழிலாளர் தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மே தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்றார்.

மே தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் உள்பட நூற்றுக்கணககான திமுகவினர், தொ.மு.ச. பேரவை இணைப்புச் சங்க நிர்வாகிகள் சிவப்பு நிற ஆடை  அணிந்து பூங்காவில் நடந்த நிகழ்வுக்கு வந்தனர்.

இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மு.சண்முகம், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியில் பாட்டாளி மக்கள் கை ஒங்கி நிற்கும் என தெரிவித்துள்ளார். மேலும் மே தின நினைவு சின்னம் எப்படி இருக்க வேண்டும் என தனது கையால் வரைந்து அதையே சின்னமாக வைத்தார் கருணாநிதி என நினைவு கூர்ந்த அவர் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் தனது கொள்கை என கூறியுள்ளார். 

தொடர்ந்து தொழிலாளர் நலன் சட்ட முன் வடிவை திரும்ப பெற்றதாக அறிவித்த அவர் விரைவில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் செய்தி குறிப்பாக இது தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  அப்போது விட்டுக் கொடுப்பதை என்றும் அவமானதுமாக கருதியது இல்லை பெருமையாக நினைத்திருக்கிறேன் என்றும் சட்டத்தை திரும்ப பெறுவதும் துணிச்சல்தான் என்றும் பேசியுள்ளார்.