நம்பிக்கையில்லா தீர்மானம்; இன்று பிரதமர் பதிலளிக்கிறார்!

நம்பிக்கையில்லா தீர்மானம்; இன்று பிரதமர் பதிலளிக்கிறார்!

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் செவ்வாய் முதல் நடைபெற்று வருகிறது. இவ்விவாதத்தில் நேற்று பங்கேற்று  உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் கொல்லப்பட்டது இந்தியாதான் என்றும், அங்கே நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தப்பட்டது பாரத மாதாதான் என்றும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி, அமித்ஷா ஆகியோர் அவருக்கு பதிலளித்தனர்.

இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.  மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே வலியுறுத்தி வந்த நிலையில் இன்று பிரதமர் மணிப்பூர் விவகாரம் குறித்து உரையாற்ற உள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இன்று பதில் அளிப்பார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:"பாஜகவினர் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள்" இராகுல் காந்தி!