நூதன போராட்டத்தில் ஈடுபட்ட ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்...! ஆட்சியர் அலுவலகம் முற்றுகை..!

மின் கட்டண உயர்வு, உர தட்டுப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூதன போராட்டம்....

நூதன போராட்டத்தில் ஈடுபட்ட ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்...! ஆட்சியர் அலுவலகம் முற்றுகை..!

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில், விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் போட்டும், அரைநிர்வாணத்தில்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மாதம் தோறும் மின்கட்டணம் வசூல் செய்ய வேண்டும், தொடக்க கூட்டுறவு, வேளாண் கடன் சங்கத்திற்கு மத்திய அரசால் ஆபத்து. எனவே கூட்டுறவு வங்கிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும், வட்டார வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கக்கூடிய நுண்ணூட்ட உரம், வேப்பம் புண்ணாக்கு, விதை, நெல் விதைகள், தட்டுப்பாடு மற்றும் முறைகேடு நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திமுக தேர்தல் அறிவிப்பின்படி கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்க வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவிவரும் யூரியா உரத்தட்டுப்பாட்டை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, 

இதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு விவசாயிகள் தர்ணா போட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்து காரில் ஏறி செல்ல முற்பட்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவின், வாகனத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.