செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் முடிவு சரியானது, இருப்பினும் சட்டப்படி...அன்புமணி விளக்கம்!

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் முடிவு சரியானது, இருப்பினும் சட்டப்படி...அன்புமணி விளக்கம்!

செந்தில் பாலாஜி விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் தவறான முடிவை ஆளுநர் எடுத்ததாகவும், அதுவே தார்மீக அடிப்படையில் சரியான முடிவை எடுத்துள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கடந்த மாதம் 12ஆம் தேதி வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளி என்கின்ற காளிதாஸ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் காளிதாஸ் குடும்பத்தினரை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

இதையும் படிக்க : மதுரை வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? உதயநிதி பாணியில் செங்கலை காண்பித்த அண்ணாமலை...!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், செந்தில் பாலாஜி ஊழல் விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் ஆளுநர் எடுத்த முடிவு தவறுதான் என்றும், தார்மீக அடிப்படையில் பார்த்தால் அது சரிதான் என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஊழல் வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கி இருப்பதாக தெரிவித்த ஆளுநர், அடுத்த நாளே அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.