நாளை மீண்டும் கூடுகிறது சட்டசபை... நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்...

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது.

நாளை மீண்டும் கூடுகிறது சட்டசபை... நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்...

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 13 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 14 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே திமுக அரசின் செயல்பாடுககைளுக்கு கண்டனம் தெரிவித்து, கூட்டத் தொடரை அதிமுக எம்.எல்.ஏ. , க்கள் புறக்கணித்தனர். 

இந்த நிலையில், மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. 

நீா்வளத் துறை மீதான விவாதத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோந்த உறுப்பினா்கள் பேச உள்ளனா். இந்த விவாதங்களுக்கு அவை முன்னவரும், துறையின் அமைச்சருமான துரைமுருகன் பதிலளித்து புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளாா்.