மாநகராட்சிக்கு பேனா பென்சில் வாங்க 50 லட்சம்; வெளியில் சொன்ன கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்! 

மாநகராட்சிக்கு பேனா பென்சில் வாங்க 50 லட்சம்; வெளியில் சொன்ன கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்! 

கரூர் மாநகராட்சிக்கு பேப்பர், பேனா, பென்சில், நோட் வாங்க 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டு அதிமுக கவுன்சிலர்கள் இருவரை இரண்டு கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டுள்ளார். 

கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று மேயர் கவிதா கணேசன் தலைமையில்  நடைபெற்றது. இதில் கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் பேப்பர், பென்சில், பேனா வாங்குவதற்காக 25 லட்சம் மதிப்பீடு தொகையாக இருந்த நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதே பேப்பர், பென்சில், பேனா வாங்குவதற்காக 25 லட்சம் என மொத்தம் 50 லட்சம் ரூபாய் முறை கேடு நடந்திருப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அதிமுக கவுன்சிலர்கள், மாமன்ற கூட்டத்தின் அஜந்தா காப்பியை வைத்து 2 நாட்களுக்கு முன்னர் செய்தித்தாள்களுக்கு பேப்பர் பேனா பென்சில் வாங்குவதற்கு ஊழல் நடந்துள்ளதாக பேட்டியளித்துள்ளனர்.

இதனை காரணம் காட்டி அதிமுக கவுன்சிலர்கள் சுரேஷ் மற்றும் ஆண்டாள் தினேஷ் ஆகிய இருவரையும்  இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி மேயர் உத்திரவிட்டார். இதனை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிக்க :இந்தியா கூட்டணி; இன்று மும்பையில் கூட்டம்!