குப்பைத் தொட்டியில் நாட்டு துப்பாக்கி: காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்பரவு பணியாளர்கள்!

குப்பைத் தொட்டியில் நாட்டு துப்பாக்கி: காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்பரவு பணியாளர்கள்!

அயனாவரம் பகுதியில் குப்பைத் தொட்டியில் கிடந்த நாட்டு துப்பாக்கியை, துப்புரவு பணியாளர்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை அயனாவரம் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் வழக்கம் போல் நேற்று குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில், ஒரு குப்பைத் தொட்டியில் குப்பைகளை அகற்றியுள்ளனர்.

அப்போது குப்பைத் தொட்டியில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் கிடைத்துள்ளன. உடனே துப்புரவு பணியாளர்கள் அந்த துப்பாக்கியை அருகில் இருந்த அயனாவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

காவலர்கள், அந்த துப்பாக்கியை ஆய்வு செய்து போது அது 1980  காலகட்டத்தில் வனப்பகுதிகளில் யானைகளை விரட்ட பயன்படுத்தப்படும் துப்பாக்கி என்று தெரியவந்தது. 

துப்பாக்கி கிடந்த குப்பைத்தொட்டியின் அருகில்  இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒரு பெண்மணி அதை வீசியது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய ஜோசப் என்பவரின் மகள் ஜெனிஷா ஜோசப் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவரிடம் விசாரணை செய்ததில் ஜோசப் மற்றும் அவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகவும், அவர் வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தும் போது இவை கிடைத்ததாகவும், அவற்றை வேண்டாம் என நினைத்து குப்பை தொட்டியில் வீசியதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அயனாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: 100 நாள் வேலையில் முறைகேடு; மக்கள் சாலை மறியல்!