அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு  மனுதாக்கல் செய்ய வந்த நிர்வாகி: விரட்டியடித்த அதிமுக தொண்டர்கள்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு  வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த கட்சி நிர்வாகி,  அடித்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு  மனுதாக்கல் செய்ய வந்த நிர்வாகி: விரட்டியடித்த அதிமுக தொண்டர்கள்...

அதிமுக  உட்கட்சி மற்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகிற 7ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான  வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், நாளை மதியம் வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ள நிலையில்  ஏராளமாளோர் திரண்டு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில்  ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய சென்னை ஓட்ரேியை சேர்ந்த பிரசாத் சிங் என்பவர் கட்சி  தலைமை அலுவலகத்திற்கு  வந்தார்.  அப்போது அவரை சூழ்ந்த தலைமை கழக நிர்வாகிகள் , அடித்து உதைத்து அங்கிருந்து விரட்டியத்ததால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ராயப்பேட்டை காவல்நிலையில் ஓமபொடி பிரசாத் சிங்  புகார் அளித்துள்ளார்.மேலும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு பெற அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் புகார் மனுவில்  கூறியுள்ளார்.