தாயை கொலை செய்த தந்தையை ஜாமீனில் விடக்கூடாது- மகன், மகள் ஆட்சியரிடம் மனு....

நாகர்கோவில் அருகே  தாயை கொலை செய்த தந்தையை ஜாமீனில் விடக்கூடாது என அவருடைய 9 வயது குழந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் கருத்து தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாயை கொலை செய்த தந்தையை ஜாமீனில் விடக்கூடாது- மகன், மகள் ஆட்சியரிடம் மனு....

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ், உமா தம்பதி. இவர்களுக்கு சுஜித் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ரமேஷ், உமாவை கொலை செய்துள்ளார். இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமீன் கோரி ரமேஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே ரமேஷின் மகன் மற்றும் மகள் தாய் வழி பாட்டியான யசோதாவுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தமது தந்தையை ஜாமீனில் வெளியே வந்தால் தங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும் நாங்கள் வசிக்கும் வீடு மற்றும் நிலத்தை ரமேஷின் சகோதரர்கள் விற்பனை செய்ய விலை பேசி வருவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.