நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது... இன்று முதல் கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி...

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முதல் கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது... இன்று முதல் கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி...
தமிழகத்தில் கொரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது... இதனால் தடுப்பூசியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய அரசிடம் கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டு வருகிறார்கள்.. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்திற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வந்துள்ளது. அதனை அனைத்து மாவட்டத்திற்கும் தேவைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது..
 
மேலும், தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி குறைந்த அளவே தமிழகத்திற்கு வந்திருக்கும் நிலையில் அதற்கான தேவை அதிக அளவில் இருந்தது, இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக 2. 15 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது.   அதனை தேவைக்கேற்றவாறு மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பபட்டுள்ளது.  குறிப்பாக சென்னைக்கு மட்டும் 35,010 கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று முதல் கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களில் போடப்படுகிறது. மேலும், கடந்த வரத்தை ஒப்பிடும் போது சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 
 
மேலும், தமிழகத்திற்கு தற்போது வரையும் 2,12,63,440 தடுப்பூசிகள் வந்திருக்கும் நிலையில் நேற்று வரை 2,06,96,109 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 30,75,292 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.