அரசின் முக்கிய இலக்காக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியது என்ன..?

அரசின் முக்கிய இலக்காக அமைச்சர்  மனோ தங்கராஜ் கூறியது என்ன..?

தமிழகத்தை திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் முக்கிய இலக்கு என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்  மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்:

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் “ஸ்மார்ட் இந்தியா ஹக்கத்தான்” இறுதி போட்டிகள் இன்று துவங்கியது. இந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 அணிகளில், 210 மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். 

செய்தியாளர்கள் சந்திப்பு:

போட்டியை துவக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,   தமிழகத்தில் அதிகளவு திறன் மேம்பாடு போட்டிகள் நடத்த தகவல் தொழில்நுட்பத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும், அதேபோன்று, இ-சேவை பணிகளையும் தீவிர படுத்தியுள்ளதாகவும், சாதாரண மக்களுக்கும் எளிய முறையில் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/ADMK-office-violence-Case-registered-against-OPS

இ- கவர்னன்ஸ் முறை:

தொடர்ந்து, தகுதியில்லாதவர்களுக்கு திட்டம் கிடைப்பதாகவும், அதே போல தகுதியுள்ள மக்களுக்கு திட்டம் செல்வதில்லை என்ற நிலையை காணப்படுகிறது.  அதற்காக தான் இ- கவர்னன்ஸ் முறை நடைமுறைபடுத்தபட்டு உள்ளதாகவும்,  தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் படி மாநிலத்தில் உள்ள மொத்த தரவுகளையும் கொண்டு நிர்வாகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 

அரசின் முக்கிய இலக்கு:

அதே போல்,  தமிழகத்தை திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்ற வேண்டும் என்பதே தகவல் தொழில் நுட்பதுறையின்  முக்கிய குறிக்கோளாகும் என்று அமைச்சர்  மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.