சென்னையில் அதிகாலை முதலே தொடங்கிய பிரம்மாண்ட மாரத்தான் திருவிழா!!ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

சென்னையில் அதிகாலை முதலே தொடங்கிய பிரம்மாண்ட மாரத்தான் திருவிழா!!ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

'சென்னை ரன்னர்ஸ்' அமைப்பு சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் மற்றும் பெசண்ட் நகர் ஆகிய இடங்களில் 42 கி.மீ., 32 கி.மீ, 21 கி.மீ மற்றும் 10 கி.மீ என 4 பிரிவுகளில் 'சென்னை மாரத்தான்' ஓட்டம் ஏற்பாடு 

சென்னையில் மாரத்தான் திருவிழா :

நேப்பியர் பாலத்தில் அதிகாலை 4 மணிக்கு நடைபெற்ற 42 கி.மீ. மற்றும் 32 கி.மீ தூரத்திற்கான மாரத்தான் ஓட்டத்தை ஓய்வுப் பெற்ற  முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஜெயந்த் முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
இதனைத் தொடர்ந்து, அதிகாலை 5 மணிக்கு பெசண்ட் நகரில் நடைபெற்ற 21 கி.மீ தூரத்திற்கான மாரத்தான் ஓட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 21 கி.மீ மாரத்தான் ஓட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்று ஓடினர். இந்த மாரத்தான் ஓட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் உட்பட சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உற்சாகத்துடன் ஓடினர்.

மருத்துவ உதவிக்கு பயன்படும் மாரத்தான் :

சென்னையில் இன்று அதிகாலையிலேயே மாரத்தான் திருவிழா என்று சொல்லக்கூடிய அளவில் பிரம்மாண்டமான மாரத்தான் ஓட்டம் தொடங்கி உள்ளது. சென்னையின் மிக முக்கிய சாலைகளில் மாரத்தான் நடைபெறுவது இதுவே முதல்முறை. மாரத்தான் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் முக்கியத்துவத்தை வலிதுறுத்தும் வகையில் சென்னை மாரத்தான் இதனை முன்னெடுத்துள்ளது. டெல்லி, மும்பை, ஐதராபாத் புகழ்பெற்ற மாரத்தான்களைப் போன்று 11 ஆண்டுகளாக சென்னை மாரத்தான் நடைப்பெற்றுள்ளது. சென்னை மாரத்தான் முன்பதிவு மூலம் கிடைக்கும் பதிவுத் தொகையானது நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இளம் சிறார்களுக்கு இன்சுலின் மருத்துவ உதவிக்கு பயன்படுத்தப்படும் என  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.