ஊட்டியில் களைகட்டிய படுகர் இன மக்களின் அறுவடை திருவிழா ...!

ஊட்டியில்  களைகட்டிய  படுகர் இன மக்களின் அறுவடை திருவிழா ...!

நீலகிரி மாவட்டம் உதகையில் படுகர் இன மக்களின் 'தெவ்வப்பா' எனப்படும் அறுவடை திருவிழாவை அந்த மக்கள் ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் தெவ்வப்பா என அழைக்கப்படும் அறுவடை திருவிழாவை ஒவ்வொரு சீமையின் வழக்கப்படி பாரம்பரியம் மாறாமல் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் கேத்தி பகுதிக்கு அருகில் கெரடா என்ற பகுதியை சுற்றி சுமார் 14 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து அறுவடை திருவிழாவில் உற்சாகத்துடன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் கலந்துகொண்டனர். 

தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமர்ந்து அவர்களது குல தெய்வமான ஹெத்தையம்மன் பக்தி பாடல்களை பாடியும் கோவிலை சுற்றிலும், மைதானத்திலும் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

இந்த விழாவில் சுமார் 2000திற்கும் மேற்ப்பட்ட படுகர் இன மக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க   |  முதன் முறையாக ஈரோட்டில் 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் மக்கள் உற்சாகம்...!