ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெயிலின் வெப்பம்

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெயிலின் வெப்பம்

வேலூர் மாவட்டத்திற்கு மாறாக ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் அதிகரிப்பு


தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பிப்ரவரி மாதம் இறுதியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் அதிகரிக்கத் தொடங்கியது, இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் வேலூர், சேலம் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக வெயிலின் தாக்கம் இருக்கும். 

மேலும் படிக்க | தூய்மை பணியாளர்கள் நலன் ஆய்வுக்கூட்டம்: பிரச்சனைகளுக்கு நடவடிக்கை - தூய்மை பணியாளர் ஆணையத்தலைவர்

ஆனால் இந்த ஆண்டு மாறாக ஆரம்பத்தில் இருந்தே ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெயில் 100 பேரனிட்க்கும் மேல் பதிவாகி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் இன்று ஈரோட்டில் 103.28°F, கரூர் பரமத்தியில் 103.10°F, மதுரை நகரம் 100.04°F, மதுரை விமான நிலையம் 102.20°F, திருச்சி 101.66°F வெயில் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க | பயண வசதிக்கு ஏற்பவே ரயில்வே துறையை மாற்றியமைத்து வருகிறோம் - பிரதமர் மோடி!