தேயிலைக்கு விலை வேண்டி 11-வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்..!

தேயிலைக்கு விலை வேண்டி  11-வது நாளாக தொடரும்  உண்ணாவிரதப் போராட்டம்..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் தேயிலை  விவசாயிகள் 11-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும் ,சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரி, தேயிலை வாரியம் உடனடியாக 30 - ஏ  சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும் 1 ம் தேதி முதல்  கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில்  நாக்குபெட்டா படுகர் நல சங்க சார்பில் 10 வது நாளாக  தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு பொரங்காடு சீமை படுகர் நலச்சங்கம் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். இந்த  11 வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில்   
கேர்பன், கீழ் கோத்தகிரி பகுதியில்  இருந்து கலந்து கொண்டனர்.

இது போல உதகை பகுதியில் உள்ள  பகொலா, கிண்ணக்கொரை பகுதிகளில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். முன்னதாக கிராமத்திலிருந்து ஊர்வலமாக வந்து குலதெய்வமான எத்தையம்மன் வழிபட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து  கிராமங்களில் தேயிலை விவசாயிகள் இலை பறிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க   | அமைச்சர்களின் வருகை: பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களுக்கு போதுமான உணவு வழங்கவில்லை..!

இதையும்   படிக்க   | "உதயநிதி தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார்" அண்ணாமலை பேச்சு!!