மசினகுடி வனப்பகுதியில் இருந்த ஆட்கொல்லி புலி திடீரென மாயம்...

மசினகுடி வனப்பகுதியில் இருந்த ஆட்கொல்லி புலி திடீரென மாயமானதால், அதை தேடி சென்ற வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மசினகுடி வனப்பகுதியில் இருந்த ஆட்கொல்லி புலி திடீரென மாயம்...

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊருக்குள் புகுந்த புலி, கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் 4 பேரை அடித்து கொன்றது. மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது, அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மசினகுடி பகுதிக்கு புலி இடம்பெயர்ந்தது. இதனையடுத்து, அந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டது. அதன்படி வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், கேரள வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், அதிரடி படையினர் என 5 குழுக்களாக பிரிந்து, ஆட்கொல்லி புலியை தேடினர்.

மாலை 5 மணி வரை தேடுதல் வேட்டை நடத்தியபோதும், புலி எங்கு இருக்கிறது? என தெரியவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டு வனப்பகுதியை விட்டு வெளியே வந்த அவர்கள், இரவு நேரங்களில் தனியாக வீட்டைவிட்டு வெளியில் வர கூடாது என்றும், மாடுகளை வனப்பகுதியில் மேய்க்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.