எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது - முதலமைச்சர் ட்வீட்!

எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது - முதலமைச்சர் ட்வீட்!

எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டம் 2வது முறையாக நேற்றையதினம் பெங்களூருவில் நடைபெற்றது. 

இந்நிலையில் நடைபெற்று முடிந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : மீண்டும் ஆஜரான அமைச்சர் பொன்முடி...2-வது நாள் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெங்களூருவில் மதச்சார்பற்ற ஜனநாயக தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றுள்ளது எனவும், பிரிவினைவாத அரசியலின் பிடியில் இருந்து நமது தேசத்தின் பன்மைத்துவ விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு I.N.D.I.A  என்ற கூட்டணியை உருவாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் தேசியவாதத்தின் முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எதேச்சாதிகாரிகள் இறுதியில் வீழ்வார்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.