பிரதமரின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு விமர்சித்த அமைச்சர்...! வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!

பிரதமரின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு விமர்சித்த அமைச்சர்...! வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைப்பெற்றது. இந்நிலையில் அங்கு நிறுவப்பட இருந்த தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சி மாற்றத்திற்கு பயன்படுத்தும் செங்கோலுக்கு பிரதமர் சாஷானமாக விழுந்து நமஸ்காரம் செய்த புகைப்படத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டு,

"மூச்சு இருக்கா ? மானம் ரோஷம் இருக்கா ? என கேள்வியெழுப்பி  பதிவு செய்திருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்,  பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளையும், அமைச்சரின் இந்த செயலுக்கு கண்டனத்தையும் பதிவு செய்து வந்தனர். 

இதனையடுத்து,  அமைச்சரின் இந்த செயல் சட்ட ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல; சத்திய பிரமாணம் செய்த ஒரு அமைச்சர், இது போன்று கீழ்த்தரமாக  செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும்  இவர் மீது வழக்கு பதிய வேண்டும் எனவும்  கூறி குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் குமரி மாவட்டம் காவல்துறைக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க அமைச்சரின் அந்த பதிவிற்கு நூற்றுக்கணக்கான எதிர்ப்பு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதில் ஈஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டு நாகர் சிலைக்கு பால் ஊற்றியது; மற்றும், செருப்பு அணியாமல் அங்கு நின்றது;  மேலும் அவருடைய பழைய வாழ்க்கையில் நடந்த சிலவற்றை பத்திரிகையில் வெளிவந்த செய்திகள் பிரசுரத்தை பதிவு செய்து கமெண்டில் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க    | திமுக அரசிற்கு எதிராக கண்டனங்களை எழுப்பிய அதிமுகவினர்...தமிழகம் முழுவதும் போராட்டம்!

இது வைரலாகிய நிலையில்,  தற்போது அமைச்சர் மனோ தங்கராஜ் அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பிரதமர் குறித்து பதிவிட்டு இருந்த அந்த சர்ச்சைக்குரிய புகைப்படமும் வார்த்தையும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க    | ”230 -ல் 150 தொகுதிகளை கைப்பற்றுவோம்...மத்தியப்பிரதேசம் தேர்தல் குறித்து ராகுல்காந்தி நம்பிக்கை”!