தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு...பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க : சிக்னலைக் கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு...!

தேசிய மருத்துவ ஆணைய கட்டுப்பாட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய மருத்துவமனைகள், முதலீடு வருவதற்கான வாய்ப்புகள் பறிபோய் விடும் நிலை இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகள் மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.