குடியை நிறுத்த மருந்து சாப்பிட்ட நபர் மீண்டும் குடித்ததால் மரணம்... சிகிச்சை தரசொல்லி வாக்குவாதம் செய்த உறவினர்கள்...

பெரியகுளம் அருகே குடி போதையில்  ஏற்கனவே உயிாிழந்தவா் உடலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

குடியை நிறுத்த மருந்து சாப்பிட்ட நபர் மீண்டும் குடித்ததால் மரணம்... சிகிச்சை தரசொல்லி வாக்குவாதம் செய்த உறவினர்கள்...

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தை சேர்ந்த ஜெயபால் எனபவர் நாள்தோரும் குடித்து விட்டு இருந்த நிலையில் அவரது மனைவி மற்றும் பெற்றோர் குடிப்பழக்கத்தை நிறுத்த நாட்டு மருந்து கொடுத்து நிறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6 நாட்களாக மீண்டும் நாள்தோரும் மது குடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் மது குடித்த நிலையில் வீட்டின் அருகே மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை உறவினர்கள் பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு சேர்ந்த போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்பதை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உறவினர்கள் இறந்த ஜெயபாலின் உடலை எடுத்து செல்ல முயன்றனர். அப்போது மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இவரின் இறப்பு குறித்து பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் தகவல் கொடுத்து காவலர்கள் முன்னிலையில் இறந்த ஜெயபாலின் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என எழுதி கொடுத்து உடலை பெற்று செல்லுமாறு தெரிவித்தனர்.

இதனை ஏற்காத உறவினர்கள் உடலை ஸ்டெச்சரில் எடுத்து செல்ல முயன்ற போது மருத்துவமனை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இறந்தவரின் உடலை மருத்துவனை நுழைவாயில் பகுதியிலே போட்டு விட்டு மருத்துவர் மற்றும் அங்கு பணியில் இருந்த பெண்காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் காவல்துறையினர் இறந்தவரின் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என எழுதி வாங்கி கொண்டு உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.