தூத்துக்குடி: 1 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் பரபரப்பு...!

தூத்துக்குடி: 1 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் பரபரப்பு...!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மனு அளித்த தனிநபர்:

சாத்தான்குளம் அடுத்த தஞ்சை நகர பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில்,இந்த ஊரை சேர்ந்த ஜோஷ்வா என்பவர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திரண்ட பொதுமக்கள்:

இதுதொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு 3 முறை கடிதம் அனுப்பிய நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக அதிகாரிகள் வருகை தந்தனர். அப்போது, அங்கு திரண்ட 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க: லஞ்சம் - ஊழல் ஒழிப்புச் சட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவாரா ஸ்டாலின்?

மனுவை வாபஸ் பெறும் வரை விடமாட்டோம்:

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா தலைமையிலான வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள், அந்த தனி நபர் கொடுத்த மனுவை வாபஸ் பெரும் வரை நாங்கள் யாரும் இந்த இடத்தை விட்டு அகல மாட்டோம்  என்று பிடிவாதத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம்:

தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தால் சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செந்தூர்
டிஎஸ்பி ஆவுடையப்பன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.