வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்கள் வரலாம்...

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.  

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்கள் வரலாம்...

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது. இந்நிலையில், தொற்று பரவல் குறைந்துள்ளதால் உயிரியல் பூங்காக்களை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து, பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் பூங்காவில் நோய் தொற்றில் இருந்து மீண்ட சிங்கங்களை பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.