உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பாரத பிரதமர் நரேந்திர மோடி நான் அல்ல - ஓபிஎஸ்

உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பாரத பிரதமர் நரேந்திர மோடி நான் அல்ல -  ஓபிஎஸ்

வரும் 24ஆம் தேதி திருச்சியில் ஓபிஎஸ்  நடத்தும் முப்பெரும் விழா மாநாட்டிற்கு தொண்டர்கள் அழைத்து வருவது குறித்து ஓபிஎஸ் கட்சி நிர்வாகிகளுடன் பண்ணை வீட்டில் ஆலோசனை. 

உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பாரத பிரதமர் நரேந்திர மோடி நான் அல்ல ஓபிஎஸ்.
முன்னாள் பாராளுமன்ற டிடிவி வழியில் தான் தற்பொழுது யாரிடமும் கையேந்தி நிற்காமல் தேனி மாவட்டத்தில் கட்சியை வழி நடத்துகிறேன் ஓபிஎஸ். 


தன்னையும் டிடிவி ஐயும் ஒன்றிணைக்க மாவட்ட செயலாளர் சையது கானிடம் கோரிக்கை வைத்து ஓபிஎஸ்

திருச்சியில் வரும் 24ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெற இருக்கும் முப்பெரும் விழா மாநாட்டில் தேனி மாவட்டத்திலிருந்து கட்சி நிர்வாகிகள் அழைத்து வருவது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆல்  பொறுப்பாளர்களாக போடப்பட்ட நகர், ஒன்றிய, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் 24 ஆம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் அவரவர்கள் பகுதியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் முழுமையாக ஆட்களை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். மேலும் தற்பொழுது எடப்பாடி செயல்பாடுகள் குறித்து கூறுகையில் சசிகலா மற்றும் டிடிவியிடம் முதல்வர் பதவியைப் பெற்ற பின்பு ஏமாற்றியவர்கள் அவர்கள். இருந்த போதிலும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு அதையே சசிகலா மற்றும் காணும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசு திராவிட மாடல் அரசு - முதல்வர் பேச்சு

மேலும் தமிழகத்திற்கு முழுமையாக ஜல்லிக்கட்டு பெற்று தந்தவர் மோடி தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என்றால் அவர் பாரத பிரதமர் மோடி அவர்கள், தான் அல்ல, என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கட்சி நிதி திரட்டுவதற்காக பல கட்சிகள் தொழிலதிபர்களிடம் கையேந்தி நிற்கும் நிலையில், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தேனி மாவட்டத்தை முழுமையாக நிர்வகிக்கும் போது யாரிடமும் கையேந்தி நிற்காத நிலையில்,  எப்படி அவர் கூறி மாவட்டத்தை தன்னிடம் விட்டுச் சென்றாரோ அதை தற்போது வரை எந்த தொழிலதிபரிடம் கட்சி நிதிக்காக கையேந்தவில்லை என தெரிவித்தார். 

அதனை அடுத்து அடிக்கடி சென்னை செல்லும் போதெல்லாம் மாவட்ட செயலாளர் சையது கான், டிடிவி தினகரனை சந்திப்பார், தான் இதுவரையிலும் தடுக்கவில்லை எனக் கூறிய போது மாவட்ட செயலாளர் சையது கான் நான் எங்கு சென்றாலும் எப்பொழுதும் உங்களிடமே இருப்பேன்  என கூறிய நிலையில் ஓபிஎஸ் எங்கு சென்றாலும் எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்றிணைத்து விடுங்கள் என ஓபிஎஸ் தெரிவித்தார்.