தந்தை உயிரிழந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாணவி..! 428 மதிப்பெண்கள் பெற்று சாதனை...!

தந்தை உயிரிழந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாணவி..!   428 மதிப்பெண்கள் பெற்று சாதனை...!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ்- பாப்பாத்தி தம்பதியினர். முருகதாஸ் பெயிண்டராக வேளைசெய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், திலகா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், திலகா அதே பகுதியில் உள்ள டேனிஷ் மிஷன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில்,  முருகதாஸ், பெயிண்டர், உடல்நலம் குன்றி கடந்த ஏப்ரல் மாதம்10-ம் தேதி அன்று அதிகாலை உயிரிழந்தார்.

அப்போது, முருகதாஸின் மகள் திலகா தனது தந்தை முருகதாஸ் உயிரிழந்து, தந்தையின் சடலம் வீட்டில் இருக்கும் பொழுதே அன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வும் அதன் தொடர்ச்சியாக மற்ற தேர்வுகளும் எழுதி இருந்தார். 

இவ்வாறிருக்க,  இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், டேனிஷ் மிஷன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 428 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் 428 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிக்க    } மயிலாடுதுறையில் சாதனை படைத்த மாணவிகள்..! ஆசிரியர்களின் செயலால் நெகிழ்ச்சி...!

பள்ளி மாணவி திலகா கூறும்போது,  "எனது தந்தை என்னை எப்போதுமே நன்றாக படிக்க வேண்டும்; அரசு துறைக்கு வேலைக்கு போக வேண்டும்; அதுதான் என்னுடைய ஆசை என என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லி வந்தார்", என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தந்தை உயிரிழந்த சோகத்திலும் மகள் தொடர்ச்சியாக தேர்வு எழுதி 428 மதிப்பெண் பெற்றது இப்பகுதி மக்களிடையே வரவேற்பையும், நிகழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க    } வெளியானது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...முதலிடம் பிடித்த மாவட்டம் எது...?