ஆர்ப்பரித்து  கொட்டும் வெள்ள நீர்...நிரம்பாத  அதிசய கிணறு...?குழப்பத்தில் கிராம மக்கள்...

தென்காசியில் கடும் வெள்ள நீர் ஆர்ப்பரித்து  கொட்டியும்  கிணறு நிரம்பாததால் உள்ளே செல்லும் நீர் எங்கே செல்கிறது? என்று அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பரித்து  கொட்டும் வெள்ள நீர்...நிரம்பாத  அதிசய கிணறு...?குழப்பத்தில் கிராம மக்கள்...

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஏந்தலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் முருகராஜ் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 70 அடி ஆழம் கொண்ட கிணற்றை அமைத்துள்ளார். அந்த கிணற்றை சுற்றி 10 ஏக்கருக்கு நெல் சாகுபடி செய்துள்ளார். 

கிணற்றுக்கு அருகே சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட கல்கட்டு என்ற குளம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பருவ மழையால் ஆங்காங்கே நீர்நிலைகள் நிரம்பி ஆர்பரித்துக்கொண்டு சென்றது. 

கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால், முருகராஜ் தோட்டத்திற்கு அருகே உள்ள குளத்திலிருந்து வெள்ள நீர் நிரம்பி  கிணற்றின் உள்ளே சென்று கொண்டிருந்தது. கடந்த ஒரு வார காலமாக செல்லும் நீரால் கிணறு நிரம்பாமல் உள்ளதால் உள்ளே செல்லும் நீரானது எங்கே செல்கிறது? என்பது அப்பகுதியினரிடையே  பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, இந்த அதிசய கிணற்றை கிராம மக்கள் பலரும் பார்ப்பதற்கு ஆர்வமாக வந்து செல்கின்றனர். இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கெனவே திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் எவ்வளவு நீர் சென்றாலும், நிரம்பாத அதிசய கிணறு இருப்பதாக தகவல் பரவியது. 

தற்போது ஏந்தலூரிலும் அதே போன்ற கிணறு குறித்த தகவல்கள் பரவியதால் பொதுமக்கள் அதிசய கிணறை பார்க்க ஆவலுடன் திரண்டு வந்து பார்த்து செல்கின்றனர்.