நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்...

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடைபெற்றது.  இந்த நிலையில், 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6 மணிக்கு முன்பு  வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப் பெட்டிகள், அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

இதன்பின்னர், 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறத. இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 73 புள்ளி 27 சதவீத வாக்குகள் பதிவானதாக, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.