அணையின் நீர்மட்டம் குறைந்தது..! பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தம்..!

அணையின் நீர்மட்டம்  குறைந்தது..! பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தம்..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 974 கன அடியிலிருந்து 15 ஆயிரத்து 606 கன அடியாக குறைந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் இரண்டு நாட்களுக்கு முன்பு காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு 18 ஆயிரத்து 974 கன அடியில் இருந்து15 ஆயிரத்து 606 கன அடியாகவும் குறைந்துள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33.10 அடியில் இருந்து 35.98 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 9.81டிஎம்சி இருந்து 10. 11 டி.எம்.சியாகஉள்ளது. இதனையடுத்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இதையும் படிக்க   | காவிரி நீர்: வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் திறக்க வலியுறுத்தல்...!