ஆய்வுகூட்டத்திற்கு வந்த அமைச்சர் காலில் விழுந்து நியாம் கேட்ட பெண்..! . காரணம் என்ன..?

ஆய்வுகூட்டத்திற்கு வந்த அமைச்சர் காலில் விழுந்து நியாம் கேட்ட பெண்..! .   காரணம் என்ன..?

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள  பத்திரப்பதிவுத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த வணிகவரி துறை மற்றும்  பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை  சந்தித்து மனு அளிக்க வந்த பெண் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். அவருக்கு 7 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் காளிமுத்துவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அதே பேரிலுள்ள அரசு அதிகாரி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் போலியான  பத்திர பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறிருக்க, பத்தாண்டுகளுக்கு முன் காளிமுத்து இறந்தபின் அவரது வாரிசுகளான மகள்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்பில்லான  இடம் போலி ஆவணம் மூலம் மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 பின்னர், இது தொடர்பாக நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு காளிமுத்துவின் வாரிசுகளுக்கு சாதகமாக வந்துள்ளது. இந்த நிலையில் சிவகங்கை பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திரத்தை மாற்றி தர மறுக்கின்றனர். 

கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பத்திரப்பதிவுத்துறை காவல்துறை என அனைத்து துறைகளுக்கும் மனு அளித்து வருவதாகவும், நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீருடன் கூறியடியே அமைச்சரின் காலில் விழுந்தார். 

இதனை எதிர்பாராத அமைச்சர் எழுந்திருங்கள்  என கூறினார் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலர் அப்பெண்ணை தூக்கினர்.  மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஆய்வுக்கூட்டம் முடிந்தவுடன் சந்திப்பதாகவும் வளாகத்தில் அமர்ந்திருக்கும் படி கூறி சென்றார்.

முன்னதாக தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்க மாநில நிர்வாகிகள் அமைச்சரிடம் மனு அளிக்க வந்தனர். அவர்களை சந்திக்க விடாமல் போலிசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதனை கண்ட அமைச்சர் அவர்களை அனுமதிக்குமாறு கூறி மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதையும் படிக்க     | தேர்தல் வழக்கில் ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!