போலீஸ் ஜீப்பை கடத்திய இளைஞர் கைது!

போலீஸ் ஜீப்பை கடத்திய இளைஞர் கைது!

வந்தவாசியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட போலீஸ் ஜிப்பை சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளது தமிழ்நாடு போலீஸ்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் அம்மாநில போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது  அங்கு வந்த சித்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீஸ் ஜீப்பை கடத்திக் கொண்டு தமிழ்நாடு வேலூர் வழியாக சென்று விட்டார். இதனையொட்டி ஆந்திர மாநில போலீசார் தமிழ்நாட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தமிழ்நாடு போலீசார் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் பஜார் சாலை வழியாக ஆந்திர பதிவு கொண்ட போலீஸ் ஜீப் சென்றதை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் பார்த்துள்ளர். பார்த்தவுடன் அதனை பின்தொடர்ந்து சென்ற துணை கண்காணிப்பாளர் கார்த்திக் கடைத்தெருவில் நெரிசலான பகுதியில்  வாகனம் நுழைந்ததும் தனது வண்டியில் இருந்து இறங்கி கடத்திவரப்பட்ட வண்டியை நோக்கி ஓடினார். இதனை பார்த்த கடத்தல்காரர் வண்டியை திடீரென வேகமாக ஓட்டனார். அப்போதும் அவரை துரத்திச சென்ற துணை கண்காணிப்பாளர் கார்த்திக் கடத்தல்காரரை மடக்கிப் பிடித்தார். பின்னர் அந்த கடத்தல்காரரை வந்தவாசி தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா வயது 24 என்று தெரியவந்தது.

இதையடுத்து சூர்யாவை கைது செய்த போலீசார் ஆந்திரா மாநில போலீஸ் ஜிப்பை பறிமுதல் செய்து  சித்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சித்தூர் போலீசார் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது கைது செய்யப்பட்ட சூர்யா மற்றும் ஆந்திர மாநிலம் போலீஸ் ஜிப்பை சித்தூர் போலீஸிடம் ஒப்படைத்தனர்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் இருந்து போலீஸ் ஜிப்பை கடத்தி வந்த இளைஞரை வந்தவாசி போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!