தமிழகத்தில் எம்.பி , எம்.எல்.ஏ-களுக்கு எதிராக 380 வழக்குகள் நிலுவையில் உள்ளது: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்...

தமிழகத்தில் எம்.பி , எம்.எல்.ஏ-களுக்கு எதிராக 380 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் எம்.பி , எம்.எல்.ஏ-களுக்கு எதிராக 380 வழக்குகள் நிலுவையில் உள்ளது: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்...

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்தி வழக்குகளை விரைந்து முடிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, கடந்த 10 ஆண்டுகளாக எம். பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்கு விவரங்கள் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா பிரமாண பத்திரம் ஒன்றை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதில், நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என 122 பேருக்கு  எதிரான வழக்குகளை அமலாக்கத் துறையும்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என  163 பேருக்கு எதிரான வழக்குகளை சிபிஐயும்  விசாரித்து வருகின்றன என தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து எம். பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையில் பல ஆண்டுகளாக  முன்னேற்றம் இல்லாமல் இருப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க   மத்திய அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள்  அறிவுறுத்தினார். மேலும், அமலக்கத்துறை, சி.பி.ஐ வசம் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.