குற்றாலத்தில் நீர் வரத்து குறைவு...! வெறிச்சோடி காணும் அருவிகள்...!

வெயிலின் தாக்கத்தால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது...!சுற்றுலா பயணிகள் வருகையும் குறையத் தொடங்கியதால் வெறிச்சோடி காணும் அருவிகள்....

குற்றாலத்தில் நீர் வரத்து குறைவு...! வெறிச்சோடி காணும் அருவிகள்...!

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் கடந்த 2 மாதமாக சீசன் களை கட்டி வந்தது. இந்நிலையில் தற்போது தென்காசி, குற்றாலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீர் நிலைகளுக்கான நீர் வரத்து குறையத் தொடங்கியுள்ளது.

இதே போன்று சுற்றுலா தலமான குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவிகளில் நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தை தனிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுக்க தொடங்கினர். ஆனால் அங்கு நீர் வரத்து குறைந்துள்ளதால் வருத்தத்துடன் திரும்பி செல்கின்றனர். அதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமின்றி அருவிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் இனியும் தொடரும் நிலை ஏற்பட்டால் அருவிகளில் நீர் வரத்து முழுமையாக நிற்கக் கூடிய சூழல் ஏற்படும் என சுற்றுலா பயணிகள் அச்சப்படுகின்றனர்.