தூத்துக்குடி : கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்...!

விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தேனி, நெல்லையை சேர்ந்த மாட்டு வண்டிகள் முதலிடம் !

தூத்துக்குடி : கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்...!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தில், கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்  நடைபெற்றது. இப்பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், ஓட்டிவந்த சாரதிகளுக்கும் விழாக்கமிட்டியின் சார்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திமரிச்ச அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு இன்று காலை மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில்,  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 48  ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 

இப்போட்டியை விளாத்திகுளம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் சடையாண்டி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நெல்லை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றன. பின்னர் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் கிராமத்தின் கோவில் கொடை விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்ற இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தில், சீறிபாய்ந்த காளைகளை மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.