தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு - டிசம்பர் 1-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 25 பேர், மதுரை மாவட்ட தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வரும் டிசம்பர் 1-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 75 நபர்களில் 27 நபர்களிடம்  விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், மதுரை மாவட்ட தலைமை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு 25 பேர் நேரில் ஆஜரானார்கள்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை ஒருதலைப்பட்சமாக செல்வதால் விசாரணையை நியாயமாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.