சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்...மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

சொத்து வரியில் 5 சதவீத தள்ளுபடி சலுகையுடன் செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை மாநகராட்சியில் சுமார் 12 லட்சம் பேர் சொத்து உரிமையாளர்களாக உள்ளனர். அவர்களிடமிருந்து ஆண்டுதோறும் 1,800 கோடி ரூபாய் சொத்து வரியாக மாநகராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டுக்கான சொத்து வரி ரூபாய் 769 கோடி வசூல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2 ஆம் அரையாண்டுக்கான சொத்து வரியை 31 க்குள் செலுத்தி 5 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள மாநகராட்சி நிர்வாகம், சொத்து வரியை இன்றைக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் தள்ளுபடி சலுகையை பெற்று கொள்ளுமாறும், வரி செலுத்தாதவர்களுக்கு புதிதாக நிறைவேற்றப்பட்ட  நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளின்படி சொத்துகளை ஜப்தி செய்தல், அபராத வட்டியை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளது.