திருவாரூர்- காரைக்குடி இடையே ரயில் சேவை... 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது...

கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட திருவாரூர்-காரைக்குடி இடையிலான ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர்- காரைக்குடி இடையே ரயில் சேவை... 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது...

திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அகலப்பாதை பணிகள் முடிவடைந்து கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் டெமு ரயில் சேவை இயக்கத்துக்கு வந்தது. ஆனால் அதன்பின் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்ததால் இந்த வழிதடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தொற்று குறைந்து ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதால், திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று இன்று காலை 8. 15 முதல்  திருவாரூரிலிருந்து ரயில் இயக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் மதியம் 2.15 மணிக்கு காரைக்குடி சென்றடையவுள்ள நிலையில்,  விரைவு ரயிலுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுவதால்,  20 பேர் மட்டுமே பயணித்ததாக கூறப்படுகிறது.