சுயதொழில் செய்யவிடாமல் தடுப்பதாக திருநங்கைகள் புகார்..!

சுயதொழில் செய்யவிடாமல் தடுப்பதாக திருநங்கைகள் புகார்..!

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் திருநங்கைகளை சுயதொழில் செய்யவிடாமல் போலீசார் தடுப்பதாக கோரி  திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

திருச்சி  சுனைனா, சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா. திருநங்கைகளான இவர்கள் இருவரும் பட்டப்படிப்பு முடித்து திருச்சி மாநகர் மாருதி மருத்துவமனை எதிரே தள்ளுவண்டி உணவு கடை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தள்ளுவண்டி கடை நடத்தக்கூடாது என அரசு மருத்துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதியழகன் அடுப்பை எட்டி உதைத்து மிரட்டி வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் கடை போடக்கூடாது கடையை எடுங்கள் என கூறியுள்ளனர்.

பல திருநங்கைகள் பாலியல் தொழில் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாங்கள் சுயமாக உழைத்து வாழ வேண்டும் என்று எண்ணி தள்ளுவண்டி கடை நடத்தி வந்துள்ளோம். இதற்கு காவல்துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் நடத்தக்கூடாது என்று கடையை எடுக்க சொல்லி மிரட்டி வருகின்றனர்.

 தங்கள்க்கு கடையை நடத்த அனுமதிக்க வேண்டும் இல்லை என்றால் தங்களுக்கு ஏதாவது வேலை தர வேண்டும் என சுனைனா, கீர்த்தனா இரண்டு திருநங்கைகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

மேலும் இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிக்க   | அண்ணாமலை பாத யாத்திரை; இபிஎஸ்-க்கு அழைப்பு