திருச்சி : வெள்ளப்பெருக்கால் 200 ஏக்கர் வாழை கன்றுகள் சேதம்..!

திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி பகுதியில் வெள்ளநீர் தரைப்பாலத்தை தாண்டி சென்றதால் வாழை தோட்டத்தில் உள்ள சுமார் 200 ஏக்கர் வாழை கன்றுகள் சேதம்..!.

திருச்சி : வெள்ளப்பெருக்கால் 200 ஏக்கர் வாழை கன்றுகள் சேதம்..!

திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி பகுதியில் வெள்ளநீர் தரைப்பாலத்தை தாண்டி சென்றதால் வாழை தோட்டத்தில் உள்ள சுமார் 200 ஏக்கர் வாழை கன்றுகள் சேதமடைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருப்பதை தொடர்ந்து முக்கொம்பு மேலணையில் வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி நீர் வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில், தற்போது வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடத்தில் 80 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதியில் உள்ள வயல்வெளிகளில்  தண்ணீர் புகுந்ததால் விளைபொருட்களை சேதமடைந்துள்ளது.   

இந்நிலையில் திருச்சி மாவட்டம், உத்தமர்சீலி அடுத்து கிளிக்கூடு அருகே திருச்சி - கல்லணை சாலையில் உள்ள தரை பாலத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அருகில் உள்ள வாழை தோட்டங்களில் வெள்ள நீர் பாய்ந்ததால் வாழை கன்றுகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கினால் சுமார் 200 ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.