கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்...

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்...

நாடு முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதுடன், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும், தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் பயன் மற்றும் அதனால் ஏற்படும் நன்மை உள்ளிட்ட தடுப்பூசி தொடர்பான அனைத்து தகவல்களையும் கர்ப்பிணிகளுக்கு கவுன்சிலிங் மூலம் தெரிவிக்க  வேண்டும் எனவும் கூறியுள்ளது.

மேலும் கர்ப்பிணிகள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும்,  தடுப்பூசி செலுத்திக் கொண்ட கர்ப்பிணிகளை சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில், முதன்முறையாக கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தடுப்பூசி செலுத்தும் பணியைத் துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த நேற்று அனுமதி கிடைத்த நிலையில், குறுகிய காலத்தில் மிக விரைவாக சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.கடலூரில் 26 ஆயிரத்து 917 பேர் உட்பட, தமிழகம் முழுவதும் 7லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.