''பாஜக அரசை தமிழ்நாட்டிற்கு வர விடாமல் உதயநிதி தடுக்கிறார்'' - தயாநிதி மாறன் எம்.பி.

''பாஜக அரசை தமிழ்நாட்டிற்கு வர விடாமல் உதயநிதி தடுக்கிறார்'' -  தயாநிதி மாறன் எம்.பி.

தமிழ்நாட்டில் பாஜக உள்ளே வராமல் தடுக்கின்ற அளவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

அப்போது தயாநிதி மாறன் எம்.பி.பேசியவதாவது,..

” நான் பல்வேறு இடங்களுக்கு சென்று கபடிப்போட்டியை பார்த்திருக்கின்றேன். ஆனால் இங்கு உங்களின் (ரசிகர்களின்) ஆர்வத்தை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. முறுக்கிற்கு மட்டுமே பெயர் போன ஊர் என்று நினைத்தேன். ஆனால் ஹாக்கி, கபடி உள்ளிட்ட விளையாட்டிற்கும் பெயர் போன ஊராக உள்ளது. இங்கு ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்று கடந்த முறை உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சொன்னார்கள்.

இந்த முறை நானும், அமைச்சருடன் சேர்ந்து சொல்கிறேன். முணப்பாறையில் ஸ்டேடியம் அமைக்க நானும் முயற்சி எடுப்பேன். தாத்தா செய்தது போல், தந்தை செய்தது போல் உதயநிதி ஸ்டாலினும் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் பாசிச பாஜக அரசு உள்ளே வராமல் தடுக்கின்ற அளவிற்கு செயல்பட்டு வருகிறார்”, என்றார்.

தொடர்ந்து  பேசிய அவர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழியை புகழ்ந்து பேசினார்.
” சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மானிய கோரிக்கையின் போது சுமார் ஒரு மணி நேரம் எந்தவித சீட்டும் இல்லாமல் பேசும் அளவிற்கு திறன் வாய்ந்த அமைச்சராக உள்ளார்”  என்றார்.

இதையும் படிக்க   \  கார்கே தலைமையில் காங்கிரஸ் முக்கிய ஆலோசனை...!